நண்பனே நண்பனே ...
நான் விலக்கிப்
போனாலும் நீ விரும்பிச்
சகித்தாயே!
நான் இடித்துப்
போனாலும் நா இனிக்கச்
சிரித்தாயே!
எதுவுமே இல்லாத
என்னையும்
ரசித்தாயே!
என்னையே பழிக்கும்
என்னையும்
முறைத்தாயே!
வெட்டியாய் இருந்த
எனக்கும் சேர்த்து
உழைத்தாயே!
என்னையே புரியாத
என்னையும்
புரித்தாயே!
என் துன்பம்
நீ கேட்டு என்னோடு
அழுதாயே!
என்னோடே
விழுந்தாயே!
எனை எழுப்பி
எழுந்தாயே!
உன் உண்மை
நட்புக்கு
உண்மையிலே
நான் நாயே.
அழுதாயே!
சிரித்தாயே!
விழுந்தாயே!
எழுந்தாயே!
சத்தியமாய்
சொல்லுகிறேன்
நீ எனக்கு
ஒரு தாயே.
Monday, April 27, 2009
Subscribe to:
Posts (Atom)